வங்கதேசத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் கலவரமாக மாறியதில் இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். அரசு பணிக்கான இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தம் கோரி ஜூலை 15 முதல் போராடும் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனால் அங்கு கலவரம் உண்டானதுடன் அசாதாரண சூழல் நிலவுவதால் இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட அண்டை நாட்டவர்கள் எல்லை வழியாக சொந்த நாடுகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.