மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மனோஜ் சோனி பதவி விலகியுள்ளார். 2017 ஆம் ஆண்டு யு பி எஸ் சி உறுப்பினரான சோனி, 2023 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஐந்து ஆண்டுகள் மீதம் உள்ள நிலையில் குடியரசு தலைவரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா கடிதத்தை அழித்து விட்டதாக கூறப்படுகிறது. இது ஏற்கப்பட்டதா இல்லையா என்று தெளிவாக தெரியவில்லை. ஆன்மீக தொண்டு புரிய பதவி விலகியதாக கூறப்படுகிறது.