ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து, விசாரணை நடந்து வரும் நிலையில் அவரின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வங்கிக் கணக்கில் இருந்தே கைதானவர்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.50 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனால், கொலை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.