நாட்டில் உள்ள 12 பொதுத் துறை வங்கிகளில் அரசுக்கு உள்ள பங்குகளை பாஜக விற்க முனைந்தால் காங்கிரஸ் எதிர்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கு 51% ஆக உள்ளது. தனியார் மயமாக்கும் நோக்கில் பங்குகளை குறைக்க அரசு முடிவெடுத்தால் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.