தமிழகத்தில் தலித்துகளுக்கு பல ஆண்டுகளாக பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து, தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தலித் சமுதாயம், தலைவர்களுக்கு பல காலமாக பாதுகாப்பில்லை, ஒடுக்கப்பட்ட சமுதாயம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்றார்.