கிரிக்கெட் உலகில் தோனி தான் நம்பர் 1 வீரர் என, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தோனி, முகமது ரிஸ்வானில் யார் சிறந்தவர் என்பதை நேர்மையாக கூற வேண்டும் என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்துள்ள ஹர்பஜன், இது ஒரு முட்டாள் தனமான கேள்வி எனவும், ரிஸ்வானிடம் சென்று கேட்டால் கூட தோனி தான் சிறந்த வீரர் எனக் கூறுவார் என்று கூறியுள்ளார்.
ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில், “இப்போதெல்லாம் நீங்கள் என்ன புகைப்பிடிக்கிறீர்கள்???? என்ன முட்டாள்தனமான கேள்வி கேட்பது. பாய்யோ இஸ்கோ படாவோ . தோனி பூட் ஆகே ஹாய் ரிஸ்வான் சே என்று நீங்கள் ரிஸ்வானிடம் கேட்டாலும் அவர் இதற்கு நேர்மையான பதிலைத் தருவார். எனக்கு ரிஸ்வான் பிடிக்கும் அவர் எப்போதும் உள்நோக்கத்துடன் விளையாடும் நல்ல வீரர்.. ஆனால் இந்த ஒப்பீடு தவறு. உலக கிரிக்கெட்டில் இன்றும் தோனி நம்பர் 1 . ஸ்டம்புகளுக்குப் பின்னால் அவரை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை” என தெரிவித்தார்.