அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வீர, தீர, சூரன்’. இந்நிலையில், இன்று எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு அசத்தலான சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், மிடுக்கான போலீஸ் கெட்டப்பில், கடும் கோபத்துடன் மீசை இல்லாமல் எஸ்.ஜே.சூர்யா அட்டகாசமான தோற்றத்தில் இருக்கிறார். இந்த போஸ்டரை பகிர்ந்து பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.