தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூர், ஓசூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் மின் கட்டண உயர்வால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்த முடியாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.