13 இனங்களில் நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்று நிதி அயோக் பாராட்டியது குறித்து தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்பது அறிக்கையில் நிரூபணம் ஆகி உள்ளது. சுற்றுச்சூழல், எரிசக்தி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் தமிழகம் முதல் மாநிலம் என்றும் தெரிவித்துள்ளது.