தமிழகத்தில் வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக உயர்ந்து காணப்பட்ட தக்காளி விலை தற்போது கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் ஏழை மக்களால் இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால் அரசு கூட்டுறவு காய்கறி கடைகளில் கிலோ தக்காளி 38 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றது. ஒருவருக்கு இரண்டு கிலோ தக்காளி வழங்கப்படுகிறது. மக்களின் சிரமத்தை குறைக்க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.