நில மோசடி வழக்கில் அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவர் பயன்படுத்திய செல்போன் சிக்னலை வைத்து கேரளாவில் போலீஸ் மடக்கியதாக தகவல் வெளியானது. ஆனால், அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்தபோது அவருடன் உரசல் இருந்ததாகவும், இதனால் சிறையில் இருந்துகொண்டு ஆட்கள் மூலம் அவரே தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.