SA அணிக்கு எதிரான T20 WC இறுதிப்போட்டியில் விராட் கோலி தன்னை வழிநடத்தியதாக இந்திய வீரர் அக்ஷர் படேல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இறுதிப்போட்டியில் முன்கூட்டியே களமிறக்கப்பட்டபோது, என்ன செய்வதென்று தெரியாது தான் ஒரு விதமான அழுத்தத்தை உணர்ந்ததாகக் கூறிய அவர், ஆடுகளத்தில் இருந்த விராட் கோலி தொடர்ந்து தன்னிடம் பேசியது, முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க நம்பிக்கை அளித்தது என்று தெரிவித்துள்ளார்