ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி என பார்க்கலாம். இந்த சேவையை பெற நாம் அருகில் உள்ள ஆதார் சேவை மையம், இ-சேவை மையம், தபால் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயோ மெட்ரிக் பதிவிட்டால் புகைப்படம் எடுக்கப்படும். புதிய படம் சில நாட்களில் அப்டேட் ஆகிவிடும். பயோ மெட்ரிக் பதிவு செய்வதால் சான்றுகள் தேவை இல்லை. அதற்கான கட்டணம் செலுத்தினால் போதும்.