ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலையை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. இதில் பல தகவல்களை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார். தனது வட்டித் தொழிலுக்கு பக்கபலமாக இருந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், ஏற்கெனவே 4 முறை கொல்ல முயற்சி நடந்ததாகவும், ஆனால் அவர் தப்பிவிட்டதாகவும், 5ஆவது முயற்சியில் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.