ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டி எடுக்கப்படும் என எடப்பாடி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் இபிஎஸ், “எது கேட்டாலும் சட்ட அமைச்சர் ரகுபதிக்கு கோபம் வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது” என கூறியுள்ளார்.