ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்கும் வீரர்களுக்காக பிசிசிஐ ரூ8.5 கோடி வழங்க முன் வந்துள்ளது. இதனை, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாரீஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். அவர்களின் பயண செலவு, பயிற்சி செலவு ஆகியவற்றுக்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.