அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கமலா ஹாரிஸ் கூறுகையில், அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நான் பெருமைப்படுகிறேன். டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி, நமது தேசத்தை ஒன்றிணைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அசாதாரணமான தலைமை பண்பிற்கும், நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்கும் மக்கள் சார்பாக நன்றி என்று தெரிவித்துள்ளார்.