திண்டுக்கல் பழனியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஹேமா சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று அவரது கை, காலில் கடித்தது. இதனால் அலறியடித்த அந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாய் கடித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மாணவிக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தெருநாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் என்று மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.