துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு வழங்குவது ஏற்புடையதல்ல என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திமுகவில் எத்தனையோ அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு பதவி வழங்கலாம் எனவும் பரிந்துரைத்த அவர், அதை விடுத்து ஸ்டாலின் மகன் என்பதால் அவருக்கு பதவி கொடுப்பதை வரவேற்க முடியாது என்று சாடினார். மேலும், குடும்ப கட்சியாக இருந்த திமுக, தற்போது குடும்ப ஆட்சியாக மாறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.