மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, ஜூலை 23-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.