அக்னிவீர் திட்டத்தின் கீழ் வெளிப்படையாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு முறை முற்றிலும் நியாயமாக நடப்பதாகவும் ஆதலால் இந்த பணியில் தங்களால் சேர்த்துவிட முடியும் என்று கூறிவரும் மோசடியாளர்கள் மற்றும் ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்கும் படி ராணுவம் எச்சரித்துள்ளது. ஆட்சேர்ப்பில் விளம்பரதாரர்கள், ஏஜென்சிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது