கோவை மாவட்டம் குனியமுத்தூரில் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் 2 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, செல்போனில் படம் எடுத்து வைத்து மிரட்டிய அதே கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குறிப்பிட்ட அந்த மாணவிகளின் சீனியர். மாணவிகள் கொடுத்த புகாரின் கீழ் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம், கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.