இந்தியாவில் வட்டி மானியத் திட்டத்தில் பயிர்க்கடனுக்கான வரம்பு உயரத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க் கடனை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. கூடிய விரைவில் கடன் தொகையை மத்திய அரசு உயர்த்தும் என்று வேளாண் அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.