பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு பிறகு, சென்னை காவல் புதிய ஆணையராக பதவியேற்ற அருண், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த 8ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னையில் பல்வேறு காவல்நிலையங்களில் கைது செய்யப்பட்ட 11 ரவுடிகள், போதை மருந்து கடத்தல்காரர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.