மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், நாளை முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது