ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், 2024-2025 பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், உலக பொருளாதாரத்தில் மந்த நிலை நீடிக்கும் வேளையில், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது என்றார். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்