உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் வாரியாக வெளியிட்டதில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவாக நெகட்டிவ் மார்க்கை பெற்றார்கள். பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மிகவும் குறைந்தபட்சமாக ஒரு மாணவர் -180 மதிப்பெண்களை பெற்றுள்ளார். நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான பதிலுக்கு நாலு மதிப்பெண்களும், அதே நேரம் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண்ணும் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.