விவசாயம், சமூக நீதி, உற்பத்தி, நகர்ப்புற வளர்ச்சி, சீர்திருத்தம் உள்ளிட்ட 9 இலக்குகளை மத்திய அரசு கொண்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய அவர், 10,000 உயிர் இடுபொருள் மையங்கள் கூடுதலாக உருவாக்கப்படும் என்றார். நுகர்வு மையங்களுக்கு அருகில் காய்கறி உற்பத்திக்கான பெரிய அளவிலான கிளஸ்டர்கள் உருவாக்கப்படும் எனவும் கூறினார்.