தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ரூ.3000 அரசு செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். அரசு திட்டங்களில் பயன்பெறாத மாணவர்களுக்கு உள்நாட்டில் கல்வி பயல ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.