வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரி, பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது 40%ஆக உள்ள கார்ப்பரேட் நிறுவன வரி 35%ஆக குறைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அதேபோல், முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்படும் ஏஞ்சல் வரி முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.