உலகமெங்கிலும் HIV நோயால் பாதிக்கப்பட்ட 90 லட்சம் மக்கள் எந்தவொரு சிகிச்சையும் பெறாமல் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2023இல் உலகம் முழுக்க 4 கோடி பேர் HIV-யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நிமிடத்திற்கு ஒருவர் வீதம், 6.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2025இல் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.