உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ED வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள அவருக்கு மூன்று நாட்களுக்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.