பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 27இல் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் என்ற வார்த்தைகூட அதில் இடம்பெறவில்லை என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் வகையில், நிதி ஆயோக்கில் பங்கேற்கவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார்.