மத்திய பட்ஜெட்டில் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டால் மேற்கு வங்க மாநிலம் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறிய அவர், மத்திய பட்ஜெட் அரசியல் சார்புடையதாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஏழை எளிய மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் பட்ஜெட் அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.