மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பட்ஜெட்டாக தெரியவில்லை என சாடிய அவர், இதன்மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள பாஜக நினைப்பது வேதனைக்குரியது என்றார். மேலும், தமிழக அரசு கோரியுள்ள திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.