டி20 உலகக்கோப்பையை வென்ற போது தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கண்களில் வலியைப் பார்த்ததாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி நாக் அவுட் செய்யப்பட்டதாகவும், அதே மேற்கிந்திய தீவுகள் மண்ணில் கோப்பையை கொடுத்த கோலியை கட்டிப்பிடித்து டிராவிட் அழுதது உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் அஸ்வின் கூறியுள்ளார். மேலும், இந்த வெற்றிக்காக அவர் மிகக்கடுமையாக உழைத்ததாக தெரிவித்துள்ளார்.