மத்திய பட்ஜெட் சில மாநிலங்களின் வளர்ச்சிக்கானது மட்டுமே என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பிஹார், ஆந்திராவுக்கு சிறப்பு நிதியை பாஜக வழங்கியுள்ளதாக விமர்சித்த அவர், இந்த முறை கர்நாடகாவுக்கு வெறும் பாத்திரத்தை மட்டுமே நிர்மலா சீதாராமன் வழங்கியுள்ளதாக சாடியுள்ளார். பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு என பெரிய அளவில் நிதியோ, திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை.