வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 61 வயது கனடாவைச் சேர்ந்த ஜில் இர்விங் என்பவர் ஒலிம்பிக் போட்டியில் அறிமுக வீராங்கனையாக களமிறங்க உள்ளார். சிறு வயதிலிருந்தே குதிரையேற்றம் கற்று வரும் அவர், 2008-க்குப் பிறகே தீவிர பயிற்சி மேற்கொண்டு, ஒலிம்பிக்ஸில் பங்கேற்க முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளார். அவரது முயற்சிகளுக்கு பலனாக அவருக்கு தற்போது இந்த வாய்ப்பு கைகூடியுள்ளது.