நல்ல கதாபாத்திரம் அமைந்தால் தெலுங்கு படங்களில் நிச்சயம் நடிப்பேன் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். அபுதாபியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும், திருமணமாகி குழந்தைகள் பிறந்ததும் தனது வாழ்க்கை மாறியதாகவும் கூறியுள்ளார். சிம்ரன் நடித்துள்ள “அந்தகன்”, “சப்தம்”, “துருவ நட்சத்திரம்” ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.