தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசை ஒட்டி வெப்பம் பதிவாகும் என்றும் கூறியுள்ளது. மத்திய, வடக்கு வங்க கடல் மற்றும் மத்திய, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.