சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றதை கடவுள் கொடுத்த பரிசாக கருதுவதாக இலங்கை அணி வீரர் மதீஷா பதிரனா
கூறியுள்ளார். ஐ.பி.எல் தொடரின்போது தோனி உடனான ட்ரஸ்ஸிங் ரூம் அனுபவப் பகிர்வு தன்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததெனக் கூறிய அவர், குறிப்பாக இலங்கையிலிருந்து விளையாட வருபவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் மிக முக்கியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.