ஒரு லட்சம் பேரில் ஒருவரை தாக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜ்கனி(26) என்ற பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை வழங்கி அவருடைய உயிரை காப்பாற்றி உள்ளார்கள் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள். அதாவது அந்த பெண்ணுக்கு பிரசவமான சில நாட்களில் வலிப்பு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது கியான் பரே என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இதனால் அப்பெண் மகிழிச்சியடைந்துள்ளார்.