தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாள்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.