கம்பீருக்கும், கோலிக்கும் இடையே எந்த பகையுணர்ச்சியையும் தான் பார்க்கவில்லை என முன்னாள் இந்திய பவுலர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். களத்தில் எதிரெதிர் அணியில் விளையாடிய போது மோதலில் ஈடுபட்ட பல வீரர்கள், ஓரணியாக திரளும் போது சிறப்பாக ஆடியுள்ளதாகவும் கம்பீரும், கோலியும் உணர்ச்சிமிக்க துடிப்பான வீரர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்றும் கூறியுள்ளார்.