ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ள பாரிஸ் நகரில் 77,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். ஜூலை 26ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் தொடரில் சுமார் 10,500 தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இத்தொடரை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 1 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களும் பாரிஸ் செல்லவுள்ளனர்.