தனுஷ் தனது 4ஆவது படத்தை விரைவில் இயக்க உள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனுஷ் உடன் நித்யா மேனன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே தகவலை நடிகர் பிரகாஷ் ராஜ் சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார். ஏற்கெனவே இருவரும் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.