விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 3ஆவது பாடல் அடுத்த சில நாள்களில் வெளியாகும் எனவும், இந்த பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்ருதி பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.