2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த விதி மூலம், தோனி நிச்சயமாக ஃபினிஷராக களமிறங்கி ஆடுவார் என கணிக்கப்பட்ட சூழலில், அந்த விதிக்கு எதிராக ரோஹித் ஷர்மா உள்பட பல வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் இம்பேக்ட் பிளேயர் விதி நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.