காமராஜர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூறும் வகையில் குமரியில் அவருக்கு ஆயிரம் அடி சிலை வைக்க காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சிலையின் கீழ் காமராஜரின் பெருமைகளை எடுத்துப் கூறும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கவும் மக்களவையில் அவர் கேட்டுக் கொண்டார். இந்த சிலை அமைப்பதன் மூலம் காமராஜரின் புகழ் பரவுவது மட்டுமல்லாமல் கன்னியாகுமரியில் சுற்றுலா துறையும் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.