விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதல் திருமணம் செய்த 24 வயது இளைஞர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் செய்த கார்த்திக் பாண்டியை அவரது காதல் மனைவியின் நந்தினியின் அண்ணன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து படுகொலை செய்து விட்டு தப்பிய பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.